என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டது : சி.வி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

என்னை பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டம் கொழும்பிலேயே தீட்டப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வடமாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிக்கும் வகையிலும் இன்று குடா நாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது. இந்த பேரணி முதலமைச்சரின் இல்லத்தை அடைந்த போது பேரணி முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தான் வடமாகாண முதலமைச்சர் பதிவியில் நீடிக்க போவதில்லை என்பதை அரசாங்கத்தின் பிராந்திய அமைச்சரான முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே எனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. நான் தொடர்ந்து மக்களின் பக்கம் நின்று கடமைகளை முன்னெடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *