ஜகத் ஜயசூரியவால் விசாரணை வலைக்குள் சிக்கியது பிரேஸில் அரசு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு நியமனம் வழங்கிய தவறுக்காக பிரேஸில் அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை வலைக்குள் சிக்கியிருப்பதாக அறியமுடிகின்றது.

முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரியவை இலங்கைக்கான தூதுவராக நியமித்ததன் மூலம் போர்க்குற்றவாளி ஒருவருக்கு இராஜதந்திர சிறப்புரிமைக்குள் நியமனத்தை வழங்கி பிரேஸில் அரசு தவறிழைத்திருப்பதாக தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றது.

“இராஜதந்திர சிறப்புரிமைகள் இருந்த காரணத்தால் தளபதி ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்யுமளவுக்கு எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால், குற்றவாளி ஒருவருக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் வசதிகளைச் செய்துகொடுத்த பிரேஸில் அரசுக்கு எதிராக நாங்கள் செயற்பட்டுள்ளோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இதனைத் தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கு பிரேஸில் அரசு பதில் சொல்லியாகவேண்டும்” என்றார் மேற்படி அமைப்பின் பேச்சாளர் ஒருவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *