விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த பிரேரணையில் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *