மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர தின கொடியேற்ற பேசும்போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று போராடினார். அவரது ரத்த வாரிசான நான் (ஜெ.தீபா) அவரது வழியில் மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்.
மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள், உபகரணங்கள் வாங்கி தருவேன்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கொள்ளளவும், பரப்பளவும் குறைக்கப்பட்டுள்ளதால் மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் தற்சமயம் உள்ள அளவினை மேலும் குறையாமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன்.
ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள் சந்தேகத்தை வெளிப்படுத்திட சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் பிரச்சினையை தீர்த்து நல்ல சுகாதார வசதி செய்து தருவேன்.

அனைத்து பகுதியிலும் பழுதடைந்த சாலைகளை சீர் செய்தல், புதிய தார்சாலை அமைத்தல், தெரு விளக்கு வசதி போன்றவை செய்து தருவேன்.

ஆர்.கே.நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரண்டு அடுக்கு, மூன்று அடக்கு மேம்பாலங்கள் கட்டப்படும்.

தினந்தோறும் குப்பைகளை அகற்றிட துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுப்பேன்.

ரே‌ஷன் கடைகளில் போதுமான அளவுக்கு தரமான அரிசி, பருப்பு வகைகள், பாமாயில், மண் எண்ணெய் வழங்கப்படும்.

இவ்வாறு தீபா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *