ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை: புதிய வெளிவிவகார அமைச்சர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இலங்கையின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

இன்று காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதி உதவிகளை பெற்று நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும் தமது எதிர்ப்பார்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் காணப்படும் பௌதீக மற்றும் மனிதவள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *