ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார்.

உலகப் புகழ்பெற்ற ஆல்பஸ் பனிமலையின் மீது சைக்கிளில் ஏறும் சாகசப் பந்தயத்தை சமீபத்தில் நிறைவு செய்த இவர், பிலோட்ரானோ நகரில் உள்ள தனது வீட்டின் அருகில் உள்ள சாலையில் இன்று காலை வழக்கம்போல் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வேன் மோதிய விபத்தில் மைக்கேல் ஸ்கார்போனி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அஸ்டானா சைக்கிள் பந்தய குழுவை சேர்ந்த சக வீரர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *