முதல்வருக்கு ஆதரவாக குடா நாட்டில் ஹர்த்தால்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வட. மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வட. மாகாணம் முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்கள் தவிர்ந்து ஏனைய வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வட. மாகாணத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வெளிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, போக்குவரத்தும் முழுமையாக தடைப்பட்டுள்ளதால் தூர பிரதேசங்களுக்கு பயணிக்கும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளுநரிடம் கையளித்த மனுவை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும் இப்பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *