நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது சுதந்திரக் கட்சி : திட்டவட்டமாக எதிர்போம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நீதி அமைச்சர் விஜேதாஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஆதரவளிக்காது என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கோ அல்லது பைஸர் முஸ்தப்பாவுக்கோ எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எவர் கொண்டுவந்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் காரணிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவருவதற்கு ஏதுவான காரணிகள் அல்ல.

நாட்டின் சொத்துகளை சூறையாடி இருந்தாலோ அல்லது தவறு செய்திருந்தாலோ சு.க அவர்களுக்கு சார்பாக இருக்காது. அது எவராக இருந்தாலும் அவர்களின் பதவியை பறிப்பதற்கு நடவடிக்கையெடுப்போம். சுதந்திரத்திற்கு பின்னர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சர்கள் முதன் முறையாக நல்லாட்சி அரசின் இராஜனாமா செய்துள்ளனர். மக்களின் கருத்துகளின் அடிப்படையில் அரசியலில் இராஜனாமா செய்வது சிறந்த விடயமாகும் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *