நிழலில் தேடிய நிஜம்…!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சுட்டெரிக்கும் சூரியன்
வானில் பவனி வந்து
நிழலில் நிஜம் தேடி
சுழலும் பூமியில்
சூரியக்கதிர்களால்
முத்தமிடுகின்றன!

விண்ணில் மிதக்கும்
வட்ட முழு நிலா
மண்ணில் பரவும்
ஒளி வெள்ளத்தில்
நிஜத்தை நிழலில்
தேடி அலைகிறது!

ஆகாயத்தில்
அள்ள அள்ள
குறையாத சுடர் விடும்
நட்சத்திர பூக்கள்
நிலத்தின் மேல்
ஒளிப்பூக்களை வீசி
நிழலில்
நிஜத்தை தேடுகின்றன!

அரசியல்வாதிகள்
மனசாட்சி நீதி நேர்மை
முத்துக்களை
ஊழல் கடலில் மூழ்கி
தேடித் பார்க்கின்றனர்!