Tag: விமல் வீரவன்ஸ

மேற்குலகின் தேவைப்பாடு சமஷ்டியே! – தனிநாட்டைக் கொடுக்கவே புதிய அரசமைப்பு என்கிறார் விமல் 

“நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான்.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச் சபையிலிருந்து எமது கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் விலகிவிட்டோம். அதேபோல் வழிநடத்தல் குழுவிலும் நாம் உறுப்பினர்களாக இல்லை. உப குழுக்களிலும் எமது உறுப்பினர்கள் […]

ரவியின் கருத்துகள் குழந்தைத்தனமானவை! – சாடுகிறார் விமல் வீரவன்ஸ

“பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் குழந்தைத்தனமானவை”  என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ எம்.பி. விமர்சித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- “2015 ஜனவரி 8ஆம் திகதி நல்லாட்சி மலர்ந்துவிட்டதாக மார்தட்டியவர்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லையென நாம் சுட்டிக்காட்டினோம். எமது கருத்தை நம்பாது மக்களையும் அவர்கள் தவறாக வழிநடத்தினர். எனினும்,  இன்று உண்மை அம்பலமாகியுள்ளது. இதனால், […]

வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் தனிநாட்டை அமைப்பதற்குத் திட்டம்! – மஹிந்த அணி எம்.பி. விமல் குற்றச்சாட்டு

தனிநாட்டுக்கான அடித்தளத்தை இடுவதற்காகவே வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோருகின்றன என்றும், அரசமைப்பில் அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி தபாலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற ‘சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- “போரை […]

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராச்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் […]