சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரின் அழைப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் தொலைக்காட்சிகளில் வெளியானது போல கடத்திச் செல்லவோ, காவலில் வைக்கவோ தாங்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை என்று சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், கோயம்புத்தூர், கவுண்டம்பாளையம் எம்எல்ஏவுமான வி.சி.ஆறுக்கட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, ”அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களை வெளியே விடுங்கள். […]





