வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் இரு அதிபர்கள் ஆகியோரின் போலி கையொப்பங்களுடனும் போலி அரச இறப்பர் இலச்சினைகளுடனும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரச வங்கியொன்றில் பதின்மூன்று இலட்சம் ரூபா கடன்பெற்று தலைமறைவாகியிருக்கும் ஆசிரியர் ஒருவரைத் தேடி மொனராகலைவிசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் வலை விரித்துள்ளனர். வெள்ளவாய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. ரட்ணசிரி மொனராகலை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட […]





