கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்கின்ற ஒருவகையான போதைப்பொருளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிக்கண்ணவின் விசேட குழுவினரால், குறித்த சந்தேகநபர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு போதைப் பொருளை விநியோகிப்பதாக குறித்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Tag: வடக்கு
இனவாதம் உருவாக இடமளிக்கமாட்டோம்: மங்கள சமரவீர
வடக்கு, கிழக்கில் எந்த வடிவத்திலும் அடிப்படைவாதம் மற்றும் இனவாதச் செயற்பாடுகள் உருவாகுவதற்கு இடமளிக்கமாட்டோம் என நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையர்களே. இதில் வடக்கு, தெற்கு என்ற பிரிவுகள் இல்லை. அண்மைக்காலமாக அதிகரித்துக் காணப்படும் இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் […]
செம்மணியில் தொடங்கிய இனப்படுகொலை நினைவேந்தல் வார நிகழ்வுகள்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா படையினரால் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சுமார் 600 பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுக்காலை செம்மணியில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் […]
வடக்கு, கிழக்கில் பொருத்து வீட்டை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
வடக்கு – கிழக்கில் முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை அமைப்பதற்கு நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலா 15 இலட்சம் ரூபா செலவில் 6 ஆயிரம் வீடுகள் இதற்கு அமைவாக அமைக்கப்படவுள்ளது. முன்நிர்மாணிக்கப்பட்ட – பொருத்து வீட்டை, வடக்கு – கிழக்கில் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. வடக்கு மாகாண சபையும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இவற்றைப் புறமொதுக்கி, முன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை […]
வடக்கு- கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடும் வறட்சி: 3 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சியினால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வடக்கில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 359 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
வடக்கு, கிழக்கில் உலகத் தரம்வாய்ந்த மூன்று வீதிகளை அமைக்க இந்தியா இணக்கம்
சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உலகத் தரம்வாய்ந்த வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நடத்திய பேச்சுக்களின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று பிரதான வீதி அமைப்புகளை அபிவிருத்தி செய்து தருமாறு […]
வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள்!
வடக்கு, கிழக்கில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ள தரப்புக்கள் அரசியல் கட்சிகள் * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி * தமிழர் விடுதலைக் கூட்டணி * ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் * அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் * புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அமைப்புக்கள் * வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் * மட்டக்களப்பு சிவில் சமூகம் * அம்பாறை முஸ்லிம்கள் […]
வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு கஜேந்திரகுமார் அணியும் ஆதரவு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அழைப்புக்கு அமைய வடக்கு, கிழக்கில் இன்று நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் முன்னணியினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “போர்க்காலத்திலும், போரின் முடிவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் போர் முடிந்து 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும்கூட எதுவும் தெரியாத நிலையே நீடிக்கின்றது. காணாமல் […]
வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள்! – துரைரெட்ணசிங்கம் எம்.பி. கோரிக்கை
வடக்கு, கிழக்கில் நாளை வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனினும், இந்தப் போராட்டத்தை அரசு கண்டுகொள்வதாக இல்லை. எனவே, அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும், எமது உறவுகளின் […]
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? – வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கின்றது பேராதரவு!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற […]





