Tag: ரணில் விக்கிரமசிங்க

மைத்திரி ரணில் அரசு

மைத்திரி – ரணில் அவசர சந்திப்பு! – ஊவா, தென் மாகாண சபைகளுக்கு ’20’ திருத்தத்துடன் மீண்டும் அனுப்பிவைப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மீண்டும் குறித்த திருத்தச் சட்டமூலத்தை சில திருத்தங்களுடன் அனுப்புவதற்கான பணிப்புரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தப்பா ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பின் பின்னரே மேற்கண்டவாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தப்பாவுக்கு […]

பறிபோகுமா விஜயதாஸவின் அமைச்சுப் பதவி? – இன்று கூடுகின்றது ஐ.தே.கவின் செயற்குழு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்  கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான குரல்கள் ஐ.தே.கவுக்குள் வலுப்பெற்றுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பதவியைப் பறிப்பதற்கான தீர்மானம் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் குறித்த அமைச்சரவையின் […]

ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாகச் செயற்படவேண்டும்! – சம்பந்தன் கோரிக்கை

“தேசிய இனப்பிரச்சினையும், பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளன. ஆகேவ, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் உரியவகையில் தீர்வுகண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துணிச்சல்மிக்க அரசியல் தலைவரென பாராட்டிய அவர், தமிழ் மக்களின் சார்பாக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு […]

புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் 2005 இல் ஜனாதிபதியாகியிருப்பார் ரணில்! – ஹக்கீம் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என்றும், எனினும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அத்திட்டத்தை அவர் நிராகரித்தார் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:- “1977 […]

ரணிலை வாழ்த்தும் விசேட அமர்வு மஹிந்த அணியால் புறக்கணிப்பு! – மூத்த அமைச்சர்கள் கடும் கண்டனம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி தொடர்ச்சியாக 40 வருட கால சேவையைப் பூர்த்திசெய்தமைக்காக வாழ்த்துத் தெரிவிக்கும்வகையில் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வை பொது எதிரணியான மஹிந்த அணியும், ஜே.வி.பியும் புறக்கணித்தன. நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர், பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்றினார். […]

ரணிலை வெற்றிபெற வைக்க ஐ.தே.க. அமைப்பாளர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா பணம்! – மஹிந்த அணி தெரிவிப்பு

2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியைத் தவிர்த்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு அந்தக் கட்சியின் அமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 50 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது என்றும், அந்தப் பணம் மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி மூலம் பெறப்பட்டது என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பிரதமரின் திருட்டைத் தேடுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ள அதிசயமொன்று இந்த […]

புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை ஜனவரியில் வெளியாகும்: பிரதமர்

புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘இலங்கை மக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘ நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய […]

நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த பிரதமர் பணிப்பு!

யாழ்.நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது எனவும், அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் […]

அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம் – ரணில் எச்சரிக்கை

அபிவிருத்தியை நிறுத்த மஹிந்த முயன்றால் சும்மா இருக்க மாட்டோம்என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் ஆட்சிமாற்றம் பின்னர் நாட்டின் வேலையின்னை மற்றும் கடன் சுமையில் இருந்து விடுப்பட ஒரு செயற்றிட்டத்தை அமைக்க ஒரு வருட காலத்தை கோரினோம். காரணம் முன்னாள் […]

அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஏற்பதாக ரணில் தெரிவிப்பு

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் அப்பாவி உயிர்கள் பலியானமைக்கான பொறுப்பை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். வெகு விரைவில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக உறுதியளித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இனியும் மீதொட்டமுல்ல பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல பகுதியில் காணப்படும் இராட்சத குப்பைமேடு குடியிருப்புக்கள் மீது சரிந்ததில் இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த […]