Tag: மைத்திரி

மைத்திரி மஹிந்த

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த மைத்திரி கூட்டணியா? அதிர்ச்சியில் மக்கள்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மைத்திரி மீது சீறிப் பாயும் ஸ்டாலின்

அதிபர் சிறிசேனா பாராளுமன்றை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால்,பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியில் ராஜபக்சே ஈடுபட்டார். இருப்பினும், அவரது முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால் ராஜபக்சே தோற்பது […]

பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி – மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. […]

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி […]

மிரட்டும் மைத்திரியால் பதறும் உறுப்பினர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையின் சமகால பிரதமர் யார் என்பது தொடர்பான அதிகார போட்டியால் கொழும்பு அரசியல் பெரும் பதற்ற நிலையை அடைத்துள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் […]

மைத்திரியின் செயலால் கோபப்பட்ட சம்பந்தர்

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி […]

Maithripala Sirisena

மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மைத்திரி

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார். தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா, “பொய்க் குற்றச்சாட்டுக்களுக்காக சிறைக்கு செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை […]

maithiri ranil

மைத்திரி மீது ரணில் கடுமையான சீற்றம்

நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே […]

ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு அரசியலில் திருப்பம்; மகிழ்ச்சியில் ரணில்

ஜனாதிபதி மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த திஸாநாயக்க ஜக்கிய தேசிய கட்சியின் வசம் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தொடர்பில் சுதந்திர கட்சியின் செயற்பாட்டில் அதிருப்தியடைந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31க்கு முன் மைத்திரியின் முக்கிய அறிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையினை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய தேவையான பங்களிப்பினை வழங்குமாறு ஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2018ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். சகல மாகாணங்களினதும் ஆளுநர்கள், […]