Tag: மைத்திரி

மைத்திரி மஹிந்த

மகிந்தவுக்கு மீண்டும் துரோகம் செய்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட 5 வர்த்தமானி அறிவித்தல்களில் 4 […]

மைத்திரிக்கும் சம்பந்தனுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் சந்திப்பு!

இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கிய விடயமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகக் கூட்டமைப்பால் வலியுறுத்தப்பட்டது. இதன்போது ஜனாதிபதி மைத்திரி பால […]

மைத்திரியின் இறுதி முடிவு வெளியானது!

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் மீளப்பெற மாட்டாதென தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சட்ட மா அதிபருடன் இது விடயத்தில் ஜனாதிபதி தரப்பு பேச்சுக்களை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையின் பின்னரே குறிப்பிட்ட வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரணில் தவிர்ந்த பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு மைத்திரி தயாராக இருப்பதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி அந்த முடிவில் விடாப்பிடியாக இருந்தால் பிரசினைக்கு இப்போதைக்கு […]

ரணில் விடயத்தில் மைத்திரி விடாப்பிடி

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் […]

பொன்சேகா

மைத்திரி மோசமாக செயற்படுவதற்கு காரணம் இதுதான்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவாரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு – வத்தளை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார. மேலும் அவர் தெரிவிக்கையில், “ஐனாதிபதி சிந்திக்காமல் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றார். மக்களுக்கு […]

மைத்திரியின் மனநிலையை அம்பலப்படுத்திய மஹிந்த அணி

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும். நாடாளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் […]

மைத்திரியின் இந்த நிலைக்கு ரணில் செய்த காரியம் அம்பலமானது

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்கமுடியாதென்ற ஜனாதிபதியின் தீர்மானத்தை ரணில் மறுதலித்திருந்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுபோன்ற காரணங்களாலேயே ரணிலை விட்டு அவர் பிரிந்ததாக தயாசிறி ஜெயெசேகர சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மா நாட்டின்போதே அவர் மேற்படி கூறினார். ”19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரை நீக்கவும் அமைச்சரவையை நியமிக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை நாடொன்றுக்கு வழங்க முடியாதென […]

பொன்சேகா

மைத்திரி கொலை சதிக்கும் எனக்கு தொடர்புமில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா இன்று பாராளுமன்றத்தில் கடுமையாக நிராகரித்துள்ளார் சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற தகவலை வெளியிட்ட நாமல்குமார ஒரு புலனாய்வு உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனாதிபதி அவரிடமிருந்தே தகவல்களை பெறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார் நாமல் குமார தற்போது பொதுஜனபெரமுனவில் இணைந்து தேர்தலில் போட்டியிட முயல்கின்றார் எனவும் […]

Maithripala Sirisena

அனைத்து அமைச்சர்களுக்கும் மைத்திரி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அரச நிறுவனங்கள் எதற்குமே இப்பொதைக்கு எந்தவொரு நியமனமும் மேற்கொள்ளவேண்டாம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சகல அமைச்சர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துளார். இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்படி உத்தரவினை வழங்கியுள்ளார். குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, “அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள் இப்போதைக்கு வேண்டாம். இது காபந்து அரசு என்பதை நினைவில் […]

கூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி நாளை கோருவார் […]