Tag: மைத்திரி – மஹிந்த

மைத்திரி மஹிந்த

மைத்திரி மஹிந்த மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் மீண்டும் சந்திக்க உள்ளனர். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அதற்கு வெளியே உள்ள […]

மைத்திரி-மஹிந்த பேச்சுவார்த்தையில் பசில் புறக்கணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜக்ஷ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஷ இடம்பெறாதமைக்கு ஸ்ரீ.ல.சு.க. விளக்கமளித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ எந்தவித இழுத்தடிப்புக்களையும் மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் ஏன் கலந்துகொள்ளவில்லையென தன்னால் கூற முடியாது எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். […]

மஹிந்தவே இலங்கைக்கு பிரதமர்!

உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது செயற்பட மைத்திரி – மஹிந்த தரப்பு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி அரசாங்கத்தை முன்னெடுத்துச் […]

கூட்டு அரசைத் தொடர்வதே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! – அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா 

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள் விலகினால் தனிக் கட்சியொன்று ஆட்சியமைக்க நேரிடலாம். அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைத்தான் பெறவேண்டியேற்படும். அப்படி நடந்தால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு  பிரச்சினைகளுக்கு எம்மால் இலகுவில் முகங்கொடுக்கமுடியாது. ஆகவே, கூட்டு அரசுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு.”  – இவ்வாறு  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாடாளுமன்றில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 82 என்ற அடிப்படையில்தான் ஆசனங்கள் உள்ளன. […]