Tag: மட்டக்களப்பு வலயக் கல்வி

விபுலானந்தரின் 125ஆவது ஜனன தின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பில்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125ஆவது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாபெரும் விழிப்புணர்வு எழுச்சி ஊர்வலங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான க.பாஸ்கரன் தெரிவித்தார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, மட்டக்களப்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விழாச் சபையின் தலைவர் க.பாஸ்கரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். […]