Tag: மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் […]

மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.

யுத்தம் முடிந்தும் யுத்தகாலக் கஷ்டங்களுடனேயே வாழ்ந்துவரும் மக்கள்!

கிழக்கில் யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்ட போதும் ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டி வாழும் மக்கள் முடிவின்றித் தொடரும் யுத்தகால அவலங்களுடனேயே வாழ்ந்து வருவது ஆய்வறிக்கைகளில் கண்டறியப்பட்டுள்ளது என ‘சொன்ட்’ அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் வாழும் மக்களின் நிலை தொடர்பில், ‘சொன்ட்’ அமைப்பின் மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் தர்மரெட்னம் விஜயகுமார் இந்த ஆய்வறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வறிக்கையில் குறித்து […]

இலங்கையில் கண்ணிவெடிகள் அற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

கடந்த 30 வருட உள்நாட்டுப் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவான மக்(MAC) நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் , 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் மக் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. 2025 இல் கண்ணிவெடிகள் […]

அமைச்சரவை முடிவுகள்

01.சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை விருத்தி செய்தல் (விடய இல. 10) இலங்கை கையொப்பமிட்டுள்ள சர்வதேச ஒப்புதல்களின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி மற்றும் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வேளையில் விபத்துக்கு உள்ளாகின்ற கப்பல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக வேண்டி தேடல் மற்றும் மீட்டெடுக்கும் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி சமுத்திரத்துடன் தொடர்பான மீட்டெடுப்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதனடிப்படையில், பல நவீன […]

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை

புலிகளின் காலத்தில் மதுபானசாலைகள் இருக்கவில்லை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதிகளில் எந்தவொரு மதுபானசாலைகள் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். 2009 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் 47 மதுபானசாலைகள் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது 50 மதுபானசாலைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு […]

முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம்

வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம்

வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம் அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இந்த […]

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம்

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது

வட.கிழக்கு பட்டதாரிகளின் போராட்டம் முடிவின்றி தொடர்கிறது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து தம்மை கல்வி கற்க வைத்த பெற்றோர் இன்று தாம் வேலைவாய்ப்பு இல்லாமல் நடு வீதிகளில் நின்று போராடுவதை எண்ணி வேதனை அடைவதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கல்விகற்ற தாம் இன்று தொழில்வாய்ப்பை பெறமுடியாமல் பலரின் ஏழனத்திற்கு உள்ளவாது வேதனையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் […]

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள்

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாக்கிரகம்

மட்டக்களப்பில் வேலையற்றபட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாக்கிரகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்றிருக்கும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி காலவரையறையற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் இந்த சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் தற்போது வரை பட்டாரிகளாக வெளியேறியுள்ள சுமார் 1500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் இந்த சத்தியாக்கிரகப் […]

தமிழ் பேரணி எஸ். வியாழேந்திரன்

தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன்

தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 மேற்பட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய […]