Tag: மகிந்த

மைத்திரிதான் இரகசிய வாக்குறுதி தந்தார்! மகிந்த

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். நீங்களே இதற்கு பொருத்தமானவர் என கூறி, பதவியேற்கச் சொன்னார்“ இப்படி கூறி, அரசியல் குழப்பத்திற்கான முழுமையான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் பக்கம் தட்டிவிட்டுள்ளார், சில வாரம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச எம்.பி. வெளிநாட்டு ஊடகமொன்றின் கொழும்பு […]

மகிந்த தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து இவ்வாறு புதிய […]

இராஜதந்திரிகளை சந்திக்கும் மகிந்த

மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மோடியைக் கண்டார் சந்திரிகா! ஓடி ஒளித்த மகிந்த!

மாலைதீவு ஜனாதிபதியாக இம்ராஹிம் முகமது சோலி நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்சவும் செல்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை. நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மஹிந்த […]

மாபெரும் கூட்டணியுடன் களமிறங்கும் – பிரதமர் மகிந்த

சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன ஒன்றிணைந்து செயற்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போது கூட்டணிக்கான இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும், அதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் மகிந்த கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, சிறிலங்கா […]

மகனை தொடர்ந்து திடீரென கட்சி தாவிய மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுண கட்சியில் சற்றுமுன்னர் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார். அவருடன் மேலும் பல சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தீவிர பாதுகாப்புடன் மகிந்த ஆதரவு பேரணி

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதிக்குச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவானவர்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் சுமார் 1500 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு, முக்கிய பிரதேசங்களில் விசேட […]

பெரும்பான்மையை நெருங்குகிறார் மகிந்த…? அரசியல் நெருக்கடி முடிவுக்கு வருமா…?

இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை அடுத்து வரும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து யார் பிரதமர் என்பதை உறுதி செய்யும் போட்டியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களே மஹிந்தவின் பெரும்பான்மைக்கு தேவைப்படுகிறது. 126 என்ற அதிக பெரும்பான்மை உறுப்பினர்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது […]

மகிந்தவிற்கு

ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர்

ஆட்சியைக் கவிழ்க்க மகிந்தவிற்கு சந்தர்ப்பம் வழங்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.