முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார். புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து […]
Tag: மகிந்த
29 கட்சிகளுடன் பாரிய கூட்டணியில் களமிறங்கவுள்ள மகிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது. நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் […]
அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் மகிந்த!
கட்சியினர் மற்றும் நாட்டுக்காக பாரதூரமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தங்காலை தொகுதி பிரதிநிதிகளுடனான கூட்டம் அங்குகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரக்கட்சியினர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளமையானது, கட்சிக்கு பெரும் […]
மகிந்த மற்றும் கோத்தாவிற்கு எதிராக இனபடுகொலை குற்றச்சாட்டு!
மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என கோத்தபாய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மிலிந்த ராஜபக்ச தனது டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி முன்னாள் பாதுகாப்பு செயலாளரிற்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர் புலிகளின் சட்டத்தரணிகள் இனப்படுகொலை குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சுமத்தவுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார் சிவானி தியாகராஜா என்ற சட்டத்தரணியே இதற்கு […]
மகிந்தவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவிக்கு சிபாரிசு
எதிர்க்கட்சி தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு ஏனைய கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானதென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், “நாம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அதற்கேற்றவாறு தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆகையால்தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை […]
பதவியை கையளிப்பதே சம்பந்தனுக்கு மதிப்பு! மகிந்த
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பான்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது. அதனை எம்மிடம் ஒப்படைத்து விலகி விடுவதேசிறந்ததாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது நாட்டில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளனர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தகுதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்கள் […]
எதனால் மகிந்த அடங்கியுள்ளார்!
நாம் எதிர்க்கட்சியில் இருப்பதால் அமைதியாகவே இருப்போம் என நினைத்துவிட வேண்டாம். நாட்டுக்கு விரோதமான செயற்பாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பை வெளியிடுவோம் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”இன்று எமது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. நாட்டில் பாரிய சவால் இருக்கும்போதுதான் நாம் […]
மகிந்தவிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!
இலங்கை அரசியலமைப்புப் பேரவையில் மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே நியமிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக நாடாளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை சபாநாயகர் அதி விரைவில் அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ல இடைக்காலக் கணக்கறிக்கைக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பதவி விலகுவதற்கு முன் கூட்டமைப்பினை சந்தித்த மகிந்த..!
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த பேச்சுவார்த்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று தற்போதைய நிலையில் இடம்பெற்றுவருகிறது. கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள விசேட உரை தொடர்பில் இதன்போது முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்ற […]
இன்று ராஜினாமா செய்யவுள்ள மகிந்த!
பிரதமர் பதவியை இராஜினாமா செய்தவதற்கு மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.தான் உட்பட அமைச்சரவை உறுப்பினர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் எந்தவொரு தீர்ப்பு கிடைத்தாலும், பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன கட்சியின் பிரதானி,பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகிக் கொண்ட போதும், ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான […]





