கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் […]
Tag: பதுளை
சீரற்ற காலநிலை உக்கிரமடையலாம்.!
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் உக்கிரமடையவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அவதானமாக இருந்துகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் தீவுகளில் தற்போதைக்கு தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. அத்தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் உக்கிரமடைந்து மத்திய வங்காள விரிகுடாவினூடாக இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளது. அதற்கிணங்க […]
கொட்டகலைக்கு அருகாமையில் ரயில் விபத்து
கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110வது கட்டைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இரவு நேர தபால் ரயில் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தினால் கொட்டகலை 60 அடி புரதான பாலம் பலத்த சேதங்களுக்குள்ளானதுடன், சுமார் 1 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை சேதத்திற்குள்ளானது. இதன்போது புகையிரத பெட்டிகள் நான்கு பலத்த சேதத்திற்குள்ளாகின. இந்த பாதையினையும் ரயில் சேவையினையும் துரித கதியில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய […]





