Tag: நாடாளுமன்றம்

தற்போதைய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து

மனிதர்களின் நடத்தையை தவறாக எடுத்துக்காட்டும் இடமாக தற்போதைய நாடாளுமன்றம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தாம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்த நாடாளுமன்றம் தற்போது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றிற்கு வருகைதந்து பதிலளிக்க முடியாத ஒருவர் குறித்து விமர்சனம் முன்வைக்கப்படுவதில்லை. எனினும், இன்று அந்த நிலைமை மாறியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ […]

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. நாட்டின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கும் அதிமுக்கிய தீர்ப்பாக இது அமையவுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்பார்த்து உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் குவிந்துள்ளனர். அத்தோடு, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக விசேட செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக […]

நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வர்த்தமானி […]

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ […]

பரபரப்பான சுழ்நிலையில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளும், எதிர்க்கட்சிகள் ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெறவுள்ளது. இது முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது. வழமையாக நாடாளுமன்றம் ஆரம்பமாவதற்கு […]