Tag: நாடாளுமன்ற உறுப்பினர்

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது […]

சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது: சுமந்திரன்

”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்தால் சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, இளைஞனின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த […]