Tag: நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஒன்றிணைந்த எதிரணியின் திட்டம் நிறைவேறாது

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீது அவர்களுக்கே உறுதியற்ற நிலை காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசும் மாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்;கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ”பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியே முதலில் […]

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு […]

ரவிக்குப் பலப்பரீட்சை! – நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு; சு.க. அமைச்சர்களும் கைவிரிக்கும் நிலை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்திடம் குறித்த பிரேரணையைக் கையளித்த மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள், அது விரைவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி விநியோக மோசடி மற்றும் சொகுசு வீட்டு விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களை […]

தப்புமா ரவியின் பதவி? ஓகஸ்ட் 2இன் பின்பே முடிவு! – நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரச தரப்பிலும் ஆதரவு

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தேசிய அரசிலுள்ள உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 2ஆம் திகதி ஆஜராகி வெளிவிவகார அமைச்சர் வாக்குமூலமளிக்கவுள்ளார். அதன்போது அவர் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வு அரசியல் களத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக, தேசிய அரசுக்குப் பெரும் […]