Tag: திலக் மாரப்பன

ஐ.நா. ஆணையாளரின் கருத்து அபத்தமானது! – அடியோடு நிராகரிக்கின்றது இலங்கை அரசு

இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ள இலங்கை அரசு, இவை அபத்தமானதும், அபாண்டமானதெனவும் சாடியுள்ளது. “சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதது, சர்வதேச சட்ட நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல்ஹுசைன், 36ஆவது கூட்டத்தொடரின் […]

புதிய அரசமைப்பு தொடர்பில் டில்லியிடம் இலங்கை ‘கப்சிப்’! – இருதரப்பு உறவு பலமாகவே உள்ளது என்று மாரப்பன தெரிவிப்பு

“புதிய அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து இந்தியப் பிரதமருக்கு நான் எதுவும் விளக்கமளிக்கவில்லை. அதற்கு இன்னமும் காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் பாதுகாப்பு, பொருளாதார, சிநேகபூர்வ விடயங்கள் குறித்துப் பேசினோம். பிராந்திய அரசியல் குறித்தான விடயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. அதனால்தான் எங்களுடன் நெருக்கமாகவும் உள்ளது. கொழும்பை புதுடில்லி நன்கு புரிந்துவைத்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கான உத்தரவாதத்தை என்னிடம் தந்தார்.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் வெளிவிவகார அமைச்சர் திலக் […]

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை: புதிய வெளிவிவகார அமைச்சர்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இலங்கையின் நற்பெயரையும், நன்மதிப்பையும் சர்வதேச மட்டத்தில் பிரபல்யப்படுத்தும் நோக்கில் தூதுவராலயம், உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கன்சியூலர் காரியாலயங்களை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். இன்று காலை அமைச்சில் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவேளையில் அமைச்சர் திலக் மாரப்பன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். […]

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன விரைவில் நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பதவி விலகுவார் என்றும், அதையடுத்து, திலக் மாரப்பன அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி விற்பனை முறைகேடு தொடர்பாக ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரை பதவி விலகுமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. […]