Tag: தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

ஜனாதிபதி தேர்தல்

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி கலந்துரையாடவுள்ளன. இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு கொழும்பில் இரா.சம்பந்தனின் […]

அரச சலுகைகள் வேண்டாம் என வலியுறுத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கவுள்ள பங்களாவை பெற்றுக்கொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். எனினும், அந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் அடியோடு நிராகரித்தார். எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்ட பினனர், எதிர்க்கட்சி தலைவருக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றிருந்தார். அதில் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலமும் அடங்கும். எனினும், மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி தலைவரான பின்னர், அவர் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலத்தை பெற்றுக்கொள்ளவில்லை. வயதில் […]

Ranil

கூட்டமைப்பை அவசரமாக சந்திக்கும் ரணில்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், […]

ரணிலிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடாளுமன்றத்தை இயக்கும் கருவி கூட்டமைப்பின் கைகளிலேயே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி விலகல் ஆவணத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து விஜேராம மாவத்தை அவரது இல்லத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்றத்தில் வெறும் 103 ஆசனங்களை கொண்டுள்ள […]

இராஜதந்திரிகளை சந்திக்கும் மகிந்த

மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார் இலங்கையின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.