Tag: தமிழரசுக் கட்சி

அனந்தி சசிதரன் அம்பலப்படுத்தி உண்மை : டக்ளஸ் வரவேற்பு

தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலை தமிழரசுக் கட்சியினரே நடத்தியதாக வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தத. இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு […]

தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி இடம்பெற்ற ரகசிய சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம், இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்ட நிலையில் ஏனைய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவ்வாறான […]

தமிழரசுக் கட்சிக்கு எதிராக அணிதிரளுங்கள்: கஜேந்திரகுமார்

வடக்கு மாகாண முதலமைச்சரை, பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி செயற்படுவதனைத் தடுக்க, தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக […]

சி.வி.க்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம்: மாவை

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு ஆளுநரிடம் கடிதமொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே […]

வடக்கு மாகாண சபையில் சுழற்சி முறை ஆசனம் யாருக்கு? – தமிழரசுக் கட்சி, புளொட் கடும் போட்டி

வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை இந்த ஆண்டு, சுழற்சி முறையில் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது. புளொட் அமைப்பு தமக்கே அந்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இதனால் இந்த […]

வடக்கு அமைச்சர்கள் ஊழல், மோசடி விவகாரம்: தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான […]

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்: சமகால அரசியல் குறித்து விவாதம்

தமிழரசுக் கட்சியின் எதிர்கால செயற்றிட்டங்கள், சமகால அரசியல் மற்றும் சமூக பொருளதார நிலைமைகள் குறித்து கலந்துரையாடும் வகையில் கட்சியின் மத்திய செயற்குழு மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) கூடியுள்ளது. ஊறணியிலுள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இன்று காலை குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், எஸ்.சிறிதரன், துரைசிங்கம், எஸ்.சுமந்;திரன், எஸ்.சிறிநேசன், […]