ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிகா ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்விரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் […]





