தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்களை தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலைகளை செய்யவும் சதி நடந்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் […]





