அதிகாரத்தை கைப்பற்றுவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம் – அமைச்சர் கயந்த வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, நாடாளுமன்றத்தையும் குழப்பிடியத்து ஆட்சி அதிகாரத்தைக் விரைவில் கைப்பற்றுவதற்கே கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அஸ்கிரிய பீட மாகாநாயக்கரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். […]
Tag: ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக
கேப்பாப்பிலவு பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வுகாண முடியாது;அரசாங்கம்
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்தில் மக்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலமீட்பு போராட்டக் கோரிக்கைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் காணிகள் விடுவிக்கப்படாத போதிலும் போராட்டங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று காணிகள் இயன்றளவில் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் போராட்டங்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. […]





