இலங்கை வரலாற்றில் முதலிடம் பிடித்த நேற்றைய நாள்! காலிமுகத்திடல் மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் சஜித்தின் வெற்றி நிச்சயம் என்கிறார் அமைச்சர் மனோ ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று கூடிய மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். இதனூடாக சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் […]
Tag: இலங்கை
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை
கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் […]
உலக தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை
உலக அமைதி சுட்டெண் தரவரிசையில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72 ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, நடப்பாண்டில் 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்தவகையில் […]
இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!
தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 34 வயதுடைய […]
தமிழ் அரசு கட்சி முக்கிய கூட்டம் நாளை
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு வரும் யூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய மாநாட்டை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களினால் மாநாடு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மாநாட்டை நடத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை காலை கட்சியின் யாழ் மாவட்ட கூட்டம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்திலும், நாளை பிற்பகல் மாட்டின் வீதியில் உள்ள […]
இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்!
பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்படுகின்ற அதிகள் அவர்களது சொந்த நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், கடந்த ஆண்டு […]
திட்டமிட்டபடி 6ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படுமா?
இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் உத்தரவாதம் அளித்ததன் பின்னரே எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, உளவுப் பிரிவு, பாதுகாப்பு சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இந்த உத்தரவாத்தை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள சில பாடசாலைகளின் பாதுகாப்பு […]
இலங்கை மக்களிடம் மைத்திரி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு உலகமும் இனங் கண்டுள்ளதாக இன்று முற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிறைவு வைபவத்தில் ரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை […]
இலங்கை வாழ் மக்களுக்கு மின்சாரம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் முழுமையான மின் தேவையை நிறைவு செய்ய 300 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம், மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ‘நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் காணப்படுகின்றதுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் […]
இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை […]





