Tag: இராணுவ தளபதி

பொது மக்களிடம் இராணுவ தளபதி முக்கிய கோரிக்கை

எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலை, அலுவலகங்களுக்கு வழக்கம் போல சென்று அன்றாட பணிகளில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அச்சத்தின் பின்னர், நாட்டில் இயல்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில் பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் வெசாக் கால பகுதியில் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். […]

கண்டியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இராணுவ தளபதி

கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ […]