அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில், நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகும் என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியா பாடுபட்டது […]





