Tag: அட்மிரல் கரன்னகொட

போட்டுக் கொடுத்தார் அட்மிரல் கரன்னகொட – சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் அடுத்து வரும் வாரங்களில் கைது செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் […]