Tag: web

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் […]

முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் சடலம் மீட்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மண்டையோடு சிதைவடைந்தநிலையில் […]

கோட்டாபய ராஜபக்ஸ

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் நிலை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அடிபணிய வேண்டாம் மஹிந்தவின் அறிவிப்பு

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் பம்பலபிட்டி இந்து கல்லூரியின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. […]

இராணுவத்தினர்

வற்றாப்பளைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்றவர்கள் பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். வடமராட்சியிலிருந்து வான் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் கைக்குண்டு ஒன்றைக் கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக பொலிஸாருக்கும் வானில் சென்றவர்களுக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன்காரணமாகவே குறித்த நபர்களைப் பழிவாங்குவதற்காக பொலிஸார் தாமே கைக்குண்டை வைத்துவிட்டு கைதுசெய்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பொலிஸாரின் இந்த திட்டமிட்ட செயலுக்கு […]

மைத்திரிபால சிறிசேன

30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம்

நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் வெற்றிகரமாக அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை […]

தும்மலசூரியவில் பதற்றம் – பொலிஸார் விளக்கம்

தும்மலசூரிய நகருக்கு இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடாத்த தயாராவதாக பரவிய வதந்தியொன்றையடுத்து, அப்பிரதேசத்தில் நேற்று (19) பதற்றம் நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதாக தும்மலசூரிய பொலிஸார் அறிவித்துள்ளனர். தும்மலசூரிய நகருக்க அருகிலுள்ள கரதாவில பாலத்துக்கு கீழ் இருந்து பயன்படுத்தப்பட்ட ரி.56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 500 ரவைகள் இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி பரவியதனாலேயே மேற்படி பதற்ற நிலைமை […]

புர்காவை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்கா அணிவதை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பொது சட்டம் அல்லது குறித்த ஒரு இனத்திற்கு மாத்திரம் வேறு சட்டத்தை அமுல்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது […]

ஜனாதிபதி

மைத்திரியின் அழைப்பை துாக்கி எறிந்த மகிந்தவின் சகாக்கள்

சீனாவிற்கான இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்தவாரம் இலங்கை திரும்பிய கையுடன், பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. வழக்கமாக பாதுகாப்புசபை கூட்டங்களில் அரசியல்வாதிகள் அழைக்கப்படுவதில்லை. பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதி உள்ளிட்ட ஒரு சில பிரமுகர்கள்தான் கலந்து கொள்வார்கள். எனினும், கடந்தவாரம் மைத்திரி வித்தியாசமான முடிவெடுத்திருந்தார். கட்சி பிரமுகர்களையும் அழைத்திருந்தார். ஐ.தே.க தரப்பிலிருந்து ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொண்டிருந்தனர். சு.க தரப்பிலிருந்து […]

யாழில் இராணுவத்தினரின் யுத்த வெற்றி விழா

யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமடைந்த “இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டு பூர்த்தி” வடமாகாண நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் தலைமையில் இன்று முற்பகல் பலாலியில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர்கள், வடமாகாண சபை திணைக்களின் தலைவர்கள், யாழ் மாவட்ட பாதுகாப்பு […]