Tag: Updates

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர்

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!

முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து […]

ரணில் ஒரு துரோகி-ரவூப் ஹக்கீம்

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் !

ரணில் ஒரு துரோகி என்பதை சத்தம்போட்டு சொல்லுவேன் ! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு துரோகி என நாடு முழுவதும் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் தான் பகிரங்கமாகவே கூறுவேன், என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி […]

வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்

வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல்

வெள்ளை வாகனத்தில் வர்த்தகர் கடத்தல் உருபொக்க பிரதேசத்தில் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களால் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் கடத்தல் இடம்பெற்றது. பெரலபநாதர பகுதியை சேர்ந்த சுரங்கா லக்மல் எதிரிசிங்க என்பவரே கடத்தப்பட்டுள்ளார். இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு வெள்ளை வான்களில் வந்த ஒரு குழுவினரால் தொழிலதிபர் கடத்தப்பட்டார்.                          

கனிமொழி

கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை

கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை – வெடித்தது சர்ச்சை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தின் தி.மு. க எம் .பி கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைத் தலைவரும் […]

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும்

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்

மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், […]

பாடசாலையை புறக்கணித்து

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்

பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான […]

மூன்றாவது நாளாக தொடரும்

மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்

மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என நம்பி வந்தபோதும் தமது வீடுகளில் […]

நீதிமன்றத்தில் சரண் சசிகலா

சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா, நீதிமன்றத்தில் சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், […]

நிலமீட்பு போராட்டத்திற்கு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு

நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர். சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம […]

சர்வஜன வாக்கெடுப்பு-சந்திரிகா

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி

புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்: சந்திரிகா அதிரடி உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று எதிரணியிலுள்ள சில தரப்பினர் மற்றும் பேரினவாத அமைப்புக்களும் வலியுறுத்திவரும் நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பது அவசியம் என்றும் […]