Saturday , December 21 2024
Home / Tag Archives: technology (page 5)

Tag Archives: technology

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில்?

தேசிய தௌஹீத் ஜமாத் திவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் உள்ளதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பணியாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. சஹஜான் என்ற குறித்த சந்தேக நபர், தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றிய பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கடமையாற்றிய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிரதேச மட்ட தலைவர்களினால் …

Read More »

யாழ் அம்மன் ஆலயத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடூரம்!

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது. மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீ ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த …

Read More »

வன்முறைச் சம்பவம் – 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!

மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களிலிருந்து மீள முன்னர், கடந்த 13ஆம் தேதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின குருநாகல், சிலாபம், …

Read More »

கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஊர்வலம்

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

Read More »

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் …

Read More »

முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் சடலம் மீட்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மண்டையோடு சிதைவடைந்தநிலையில் …

Read More »

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் நிலை

கோட்டாபய ராஜபக்ஸ

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Read More »

அடிபணிய வேண்டாம் மஹிந்தவின் அறிவிப்பு

அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் பம்பலபிட்டி இந்து கல்லூரியின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. …

Read More »

வற்றாப்பளைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!

இராணுவத்தினர்

யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்றவர்கள் பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். வடமராட்சியிலிருந்து வான் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் கைக்குண்டு ஒன்றைக் கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக பொலிஸாருக்கும் வானில் சென்றவர்களுக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன்காரணமாகவே குறித்த நபர்களைப் பழிவாங்குவதற்காக பொலிஸார் தாமே கைக்குண்டை வைத்துவிட்டு கைதுசெய்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பொலிஸாரின் இந்த திட்டமிட்ட செயலுக்கு …

Read More »

30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம்

மைத்திரிபால சிறிசேன

நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் வெற்றிகரமாக அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை …

Read More »