அதிமுகவில், அணிகள் இணைப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிஞ்சிவிட்டதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதைக் கூறினார்.
Tag: Tamilnadu news
ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை தேவை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தர்மத்தோடு யுத்தம் நடத்துபவர்கள் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்கிறார்கள். அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது அவர்கள்தான் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள். அம்மா அவர்களின் மரணம் குறித்து அவர்களிடம்தான் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். […]
ரஜினி, கமல் செய்தது என்ன?
மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை […]
டிடிவி தினகரன் நியமனம் செல்லாது!
டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் டிடிவி தினகரன் சமீபத்தில் அதிமுக அம்மா அணியில் 67 கட்சிப் பதவிகளுக்கு புதிதாக நியமனங்களை மேற்கொண்டார். இந்த நியமனம் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி அணியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவதற்கு […]
அதிமுகவில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுவருவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுகவின் உட்கட்சி பூசல். அவரை நீக்குவதும், சேர்ப்பதும் அவர்கள் உரிமை” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், “அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது” என்றார். தினகரனின் நியமனம் செல்லாது என இபிஎஸ் அணியினர் […]
நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்டாலின் மிரட்டல்
தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,” என, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., பிரிந்ததிலிருந்து, தமிழகத்தில், அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தொடர்ந்து […]
முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி
விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை […]
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் […]
தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல
தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல தனிநாட்டுக்கான கோரிக்கையைப் பலப்படுத்தவே அரசமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய அரசமைப்புக் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது வெற்றியிலோ, தோல்வியிலோ முடிவடைந்தாலும் அது கூட்டமைப்புக்குச் சாதகமாகவே அமையும் எனவும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த […]




