யாழில் உலகிற்கு செய்தி சொல்லும் ‘எழுக தமிழ்’ பேரணி ஆரம்பம்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் பேரணி யாழில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் […]
Tag: Tamil
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்!
பதவியை துறக்கும் தீர்மானத்தில் விக்னேஸ்வரன்! தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைமை பதவியில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நீடிப்பதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும், விக்னேஸ்வரன் இணைத்தலைவர் பதவியை துறப்பதை பேரவைக்குள் ஒரு அணி விரும்பவில்லை. என்பதோடு விக்னேஸ்வரனே இணைத்தலைமையில் நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். யாழில் நாளை மறுநாள் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளாதவர்களால், விக்னேஸ்வரனின் இணைத்தலைமை குறித்து […]
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்
பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு […]
UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்
UNP தலைவர்களுடன் சஜித் முக்கிய கலந்துரையாடல் UNP துணை தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரமுகர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று இன்று இரவு நடைபெறவுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற உள்ளது. இதன்போது வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவுள்லதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 11.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 11.09.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்களிடம் ஆதரவாகப் பேசத் தொடங்குவீர்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயர திகாரி உங்களை முழுமையாக நம்புவார். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் […]
யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம்
யாழில் பிணத்தை வைத்து லஞ்சம் வாங்கும் பேரவலம் சாவகச்சேரியில் நேற்றையதினம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட வயோதிபடின் சடலம் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்துள்ளது. பேஸ்லைன் வீதி, கொழும்பு 2 என்ற முகவரியைச் சேந்த 75 வயதுடைய வரதராசா செல்லப்பா என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். அவரது உடல் ஒரு நாளுக்கும் அதிகமாக பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து, சற்று முன்னர் சாவகச்சேரி ஆதார […]
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா […]
வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!
வவுனியாவை சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது! சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வவுனியா இளைஞர் ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. […]
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்
அவுஸ்ரேலியாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம் யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருத்தித்துறை செம்பருத்தி உணவுக்கடை உரிமையாளரின் சகோதரரான குமார் பகீதரன் என்ற இளைஞரே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது . எனினும் குறித்த இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. […]
அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் இல்லை
ஐக்கிய அமெரிக்காவின் ஆயுதப்படைகளை இலங்கைக்குள் களமிறக்கவில்லை எனவும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பில் மட்டுமே இலங்கை உள்ளதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் நெருக்கடி நிலைமைகளை அடுத்து இலங்கைக்குள் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்குள் எந்தவித சர்வதேச இராணுவ படைகளும் களமிறக்கப்படவில்லை எனவும், குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் இராணுவப்படைகள் […]




