கிளிநொச்சியில் இராணுவ அதிகாரிகள் உட்பட 21 பேர் கைது! கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில், இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேரை, விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர்கள் புதையல் தோண்ட முற்பட்டவேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான பூஜை பொருள்கள், ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைதானவர்களில் 5 இராணுவ அதிகாரிகளும் 5 இராணுவ வீரர்களும், […]
Tag: Tamil news
நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய
நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல […]
பேச்சு வார்த்தை நடத்த தயார் ! இரா.சம்பந்தன்
பேச்சு வார்த்தை நடத்த தயார் ! இரா.சம்பந்தன் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, கோத்தபாய ராஜபக்ச அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தாம் தயாராகவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல்கள் நிறைவு செய்யப்பட்டு பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ள போதும் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனங்களும், கொள்கைத்திட்ட வெளியீடுகளும் இடம்பெறாத நிலையில் அவசரமான […]
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி
டெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பலி மாத்தளையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பதினொரு வயது பாடசாலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த சிறுவன் கடந்த 8ஆம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிற்ச்சைக்காக கடந்த 10ஆம் திகதி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவே குறித்த சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ளதாக […]
ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு!
ஐக்கிய தேசியக்கட்சி முக்கியஸ்தர்களிற்கு ரணில் கடுமையான உத்தரவு! ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாகரிகமாக செயற்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் மத்துகமவில் நடந்த நிகழ்வில் ஹேஷா விதானகே உரையாற்றிய போது, சஜித் தேர்தலில் வெற்றிபெற்றதும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணிய வேண்டி வருவமென கூறியிருந்தார். இதனால் கோத்தபாய உச்ச மகிழ்ச்சியில் உள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே இன்று கட்சி […]
கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!
கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் […]
முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது!
முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் உட்பட ஐவர் மட்டக்களப்பில் கைது! மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்குழுவினர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது மூவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கள்ளியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கியும் பத்து […]
ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!
ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா். முல்லைத்தீவில் […]
பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு
பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை […]
பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம்
பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி […]




