Monday , November 18 2024
Home / Tag Archives: tamil news Portal

Tag Archives: tamil news Portal

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்!

கனமழை இலங்கை நாடாளுமன்றம்

கனமழை மூழ்கும் அபாயத்தில் இலங்கை நாடாளுமன்றம்! நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடா்ச்சியான கனமழைகாரணமாக இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சாிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வருவதோடு பெய்யும் கடும் மழையால் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தைச் சுற்ற உள்ள தியவன்னா குளம் தற்போது வெள்ளநீரில் …

Read More »

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்!

ஞானசாரரை தீயிட்டு

ஞானசாரரை தீயிட்டு கொழுத்திய மக்கள்! முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி நேற்றையதினம் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டது. அதுமாத்திரமல்லாமல் அங்கிருந்த சட்டத்தரணிகள் மீதும் மக்கள் மீதும் பிக்குகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு மக்கள் தீயிட்டு எாித்துள்ளனா். முல்லைத்தீவில் …

Read More »

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு

பாட்டாளி சம்பிகவிற்கு கோத்தா அழைப்பு ஜாதிக ஹெல உரிமை தலைவர் பாட்டளி சம்பிக ரணவக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பிக ரணவக்கவின் கொள்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சிறந்த இடம் என்றும் பெரமுன் கூறியுள்ளது. அத்துடன் சம்பிக ரணவக்க தற்போது வகிக்கும் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவியை …

Read More »

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி!

அரசாங்கம் கோத்தபாயவை கைது

அரசாங்கம் கோத்தபாயவை கைது செய்ய முயற்சி! ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன் கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற்போது பல முயற்சிகளை மேற்கொள்கின்றதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டத்தை தனது தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று குறிப்பிடும் சட்டமா அதிபர் திணைக்கள சொலிஸ்டர் ஜனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமரத்ன பதவி விலக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் …

Read More »

தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல

தனிநாட்டுக் கோரிக்கை-கெஹெலிய ரம்புக்வெல

தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல தனிநாட்டுக்கான கோரிக்கையைப் பலப்படுத்தவே அரசமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய அரசமைப்புக் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது வெற்றியிலோ, தோல்வியிலோ முடிவடைந்தாலும் அது கூட்டமைப்புக்குச் சாதகமாகவே அமையும் எனவும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த …

Read More »

மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா

மனித உரிமை கரிசனைகள் அலோக் சர்மா

மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா ஸ்ரீலங்காவின் வட மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத ரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களையும் பிரித்தானிய கண்டிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார். செயற்பாட்டு சுதந்திரம், நம்பிக்கை …

Read More »

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம்

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஸ்ரீலங்கா விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 09 …

Read More »

வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி

வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை

வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் – இந்தோனேசியா உறுதி வடகொரிய அதிபரின் அண்ணன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என இந்தோனேசியா உறுதி செய்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம், சமீபத்தில் மக்காவ் நாட்டில் இருந்து மலேசியாவுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் …

Read More »

ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம்

ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம்

ஜெய்சங்கர் ஸ்ரீலங்காவிற்கு பயணம் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், சீனா, ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்திய – ஸ்ரீலங்கா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இவரது பயணம் அமைந்திருக்கும் என்று எக்கனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. …

Read More »

இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல்

இனவாத நோக்கிலேயே-சக்திவேல்

இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது: சக்திவேல் இனவாத நோக்கிலேயே மக்களின் காணிகளை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதென்றும் இவ்விடயத்தில் நல்லாட்சி அரசும் தாம் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வகையிலேயே செயற்படுகின்றதெனவும் மலையக ஆய்வு மையத்தின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் கடந்த இரு வாரங்களை கடந்தும் வீதியில் போராட்டம் நடத்திவரும் நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு உடனடியாக இம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க …

Read More »