பேஸ்புக் காதல்- 18 வயது இளைஞன் பலி! திருகோணமலை-வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த இளைஞரொருவர் தமது பேஸ்புக் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றுள்ளதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான என். டபிள்யூ. அமில […]
Tag: tamil news live
இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்
அரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய கட்சியிலான அரசாங்கத்திலே தொடர்ச்சியாக ஊடகத்துறைக்கு எதிரான செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெயர் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை முறையற்ற செயற்பாடாகும். என பொதுஜன பெரமுன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு […]
ஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த
புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசியலமைப்பு திருத்தம் நாட்டைப் பிரிக்கும் முயற்சியாகும். ஒரு சிலர் இதனைத் திருத்தம் என்கிறனர். ஒருசிலர் சட்டமூல வரைவு என்கிறனர். ஒரு சிலர் அப்படி […]
மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, […]
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 184.3 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கொள்வனவு விலை 180.6 ரூபாயாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக துறைசார் அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…
கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? ..சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை […]
பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா
பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்கிறார் என அமித் ஷா கிண்டல் அடித்துள்ளார். பாரதிய ஜனதா அகில இந்திய தேசிய தலைவர் அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் […]
ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம்
ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பம் ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நேரத்தின் படி நேற்றைய தினம் மதியம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐக்கிய நாடுகள் நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ் தமிழ் […]
தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல
தனிநாட்டுக் கோரிக்கையைப் பலப்படுத்த கூட்டமைப்பு திட்டம் – கெஹெலிய ரம்புக்வெல தனிநாட்டுக்கான கோரிக்கையைப் பலப்படுத்தவே அரசமைப்புப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. புதிய அரசமைப்புக் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது வெற்றியிலோ, தோல்வியிலோ முடிவடைந்தாலும் அது கூட்டமைப்புக்குச் சாதகமாகவே அமையும் எனவும் கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த […]
மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா
மனித உரிமை கரிசனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகிறோம் – அலோக் சர்மா ஸ்ரீலங்காவின் வட மேற்கு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத ரீதியில் சிறுபான்மையாக உள்ளவர்களுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களையும் பிரித்தானிய கண்டிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக கனிஷ்ட இராஜாங்க அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார். செயற்பாட்டு சுதந்திரம், நம்பிக்கை […]




