மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது […]
Tag: tamil nadu
நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்
நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். […]
காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக […]
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை […]
பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ
பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இதுவரை […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல் அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் […]
செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு
செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் – புதிய அமைச்சரவை பட்டியல் வெளியீடு நீண்ட காலத்திற்கு பின்னர் செங்கோட்டையன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். 31 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பம் முடியும் நிகழ்வாக, இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்க இருக்கின்றனர். […]
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி […]





