கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 …
Read More »அவசரகால சட்டம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் ஒருமாத காலப்பகுதிக்கு பின்னர் தளர்த்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளார். பாதுகாப்பு துறையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். …
Read More »ஏறாவூரில் இராணுவத்தினரின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய பெண்
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கஞ்சாவுடன் இன்று திங்கட்கிழமை பெண்ணொருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தப் பெண்ணின் வீட்டிலிருந்து 6 கட்டு கஞ்சா பொதி மீட்கப்பட்டடுள்ளது. இதனை தொடர்ந்து குறித்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
Read More »நேரம் வந்துவிட்டது – நாமல் அறிவிப்பு
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் வெற்றிப் பெறுமா, அல்லது தோல்வியடையுமா என்பதை குறிப்பிட முடியாது. ஆனால் …
Read More »நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்துக்கு நெருக்கடி
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதன் ஊடாக இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வழி உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அரசாங்கத்திலுள்ள கிறிஸ்தவ அமைச்சர்கள் எவரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக மாட்டார்கள். அவ்வாறு எதிர்த்தால், அவர்களது சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும். இந்த …
Read More »மௌன புரட்சியை கலைத்துள்ளேன்! அதிரடி காட்டப் போறேன்!
நான் அரசியல்வாதிகளின் கைக்கூலி அல்லன். தியானம் செய்து எஞ்சியுள்ள காலத்தை கடப்பதற்கு எடுத்த முடிவை மாற்றிவிட்டேன் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இன்று தலதா மாளிகைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், எதிர்காலம் குறித்து அறிவிப்பொன்றை விடுத்திருந்தேன். …
Read More »பாரிய தேடுதலில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 100 பேர் கைது
ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் இன்றுவரை 4 நாட்கள் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த …
Read More »சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது
சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தவதாக அமைந்து விடக் கூடாது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற …
Read More »துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நால்வர் கைது
பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளுடன் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று காலை குறித்த பிரதேசத்தில் கார் ஒன்றினை பரிசோதனை செய்தபோதே குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் சந்தேகநபர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் …
Read More »ரொஷானின் சடலம்! கொலையா? தற்கொலையா?
மத்திய மாகாணம் – தலவாக்கலை, ஒலிரூட் பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த பாதசாரதிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடரட்டமெனிக்கே புகையிரதத்தில் மோதுண்டு இவ் இளைஞன் உயிரிழந்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் தலவாக்கலை, ஒலிரூட் கீழ்பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய பெனடிக் ரொஷான் என்பவருடையது என தெரியவந்துள்ளது. …
Read More »