சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். இதை […]
Tag: sri lankan tamil news
நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து
நீதி வென்றது: கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளதாக, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனை சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
ட்ரம்ப் அரசாங்கத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கை
ட்ரம்ப் அரசாங்கத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பில் இலங்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடனான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையாக இச் சந்திப்பு அமைந்திருந்ததென, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. […]
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களைப் பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நடவடிக்கை 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானது என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாணசபைகளின் அதிகாரங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பறிக்கப்படுவதை தடுக்க மாகாணசபைகளில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஏனைய முயற்சிகள் தோல்வியடைந்தால் நீதிமன்றத்தை […]
மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன்
மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன் கேப்பாபுலவு மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் சந்தித்தார். கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து அமைச்சர் பா. டெனஸ்வரன் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களின் போராட்டம் […]
ரணில் அவுஸ்ரேலியா பயணம்
ரணில் அவுஸ்ரேலியா பயணம் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அவுஸ்ரேலியாவுக்கு செல்லவுள்ளார். அவுஸ்ரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர்களான விஜித் விஜயமுனி சொய்சா, அர்ஜூன ரணதுங்க பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் பிரதமருடன் அவுஸ்ரேலியா செல்லவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அவுஸ்ரேலியப் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் […]
ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல்
ஜெர்மனி ஹாம்பர்க் விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை 50 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று அங்கு ஏர்கண்டிசன் சிஸ்டத்தில் திடீரென ஒருவித நச்சு வாசனை வெளியானது. பின்னர் அது படிப்படியாக விமான நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு பல மணி நேரம் விமான […]
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம்
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து குடியேறுபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். அதை நடை முறைப்படுத்த அதிவிரைவு நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். எல்லையின் சில பகுதிகளில் […]





