முதல்வர் ஓ.பி.எஸ் தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்., இன்று தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார். தமிழகத்தில் அரசியல் பரபரப்பான சூழலில் ஓ.பி.எஸ்., வருவதால் தலைமை செயலர் கிரிஜி வைத்தியநாதன் இன்று மூத்த போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் இன்று தலைமை செயலகம் வந்தார். […]
Tag: sports news in tamil
முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன்
முஸ்லிம் மக்களுக்கு சமஷ்டி கட்டமைப்பு உருவாக்க வேண்டும் – எஸ். வியாழேந்திரன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு வேண்டுமென்றால், முஸ்லிம் மக்களுக்கென சமஷ்டிக் கட்டமைப்பொன்றை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் தலைமைகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துதற்கு முன்னர், முஸ்லிம் அரசியல் தலைமைகளுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டினை […]
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல்
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட வழக்கு – சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் அறிக்கை தாக்கல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட் கடந்த வாரம் உத்தரவிட்டது. அதுகுறித்து விடுதியில் […]
சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம்
சர்வஜன வாக்கெடுப்பிற்கு அனுமதியோம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீறி, நாட்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸாமில் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் அழுக்குகளை கழுவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி […]
சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் – மனோ கணேசன்
சமஷ்டி வேண்டாம் என்ற முட்டாள்களே தமிழ் தலைவர்கள் சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஹமத் அலி ஜின்னாவை போல 1948 ஆம் ஆண்டு பிடிவாதமாக நின்று தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம். அல்லது அன்று தென்னிலங்கை […]
தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்
தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் […]
தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். […]
வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள்
வட கொரியாவின் ஏவுகணை சோதனை விவகாரம் – ஐநா பாதுகாப்பவையின் அவசர கூட்டத்திற்கு வேண்டுகோள் வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனையை பற்றி விவாதிக்க அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பவையை அவசரமாக கூட்ட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளன. ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட நடுத்தர ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை: இந்த ஏவுகணை […]
திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது
திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது அமெரிக்காவின் திரையிசைப் படமான “லா லா லாண்ட்”, பிரிட்டன் அக்காடெமி விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்கார் விருதுகளுக்கு முன்னால், நடைபெறும் கடைசி முக்கிய விருது வழங்கும் நிகழ்வான பிரிட்டன் அக்காடெமி விருதுகளில், சிறந்த இயக்குநர் டாமியன் சாஸெல்லி மற்றும் சிறந்த நடிகை இம்மா ஸ்டோன் […]
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக
அரசுக்கு மஹிந்த அழுத்தம் : தேர்தலை உடன் நடத்துக உள்ளுராட்சி சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை, கால்டன் வீட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் ஒன்றியத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல் பிற்போடப்படுவதன் காரணமாக உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது செயலற்று போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி […]




