ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி […]





