சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் […]
Tag: Politics
நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம்
நீதிபதி நியமிப்பு தொடர்பான பீரிஸின் கருத்து இனத்துவேஷத்தின் வெளிப்பாடு: மட். சிவில் சமூகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நீதிபதியாக, சமீபத்தில் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட வழக்கறிஞர் இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்து, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், விமர்சித்துள்ளமை, இனத்துவேஷ காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துள்ளது. நீதிபதி கண்ணனின் நியமனத்தை குறித்தும், அதனை வழங்கிய ஜனாதிபதியைப் பற்றியும் அவதூறுகள் ஏற்படும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல். […]
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள்
கேப்பாபுலவு மக்களுடன் கிழக்கு பல்கலை மாணவர்கள் கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்ட இடத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காகவே தாம் இன்றைய தினம் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் […]
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா. எவ்வித அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்தார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசைன் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிறுபான்மை மக்கள் மற்றும் சிறுபான்மை […]
பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ
பிணைமுறி மோசடி: பிரதமரிடம் விசாரணை நடத்த வலியுறுத்தும் வாசுதேவ மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இதுவரை […]
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. […]
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்
பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல் அமெரிக்காவில் பதவி விலகிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் […]
மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்
மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், […]
பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்
பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான […]
மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்
மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என நம்பி வந்தபோதும் தமது வீடுகளில் […]





