பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்தநிலையிலேயே அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்தினை பிரிதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி […]
Tag: politics news
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்!
வவுனியா இ.போ.ச ஊழியர்கள் சாலையில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்! கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்து சபையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் வவுனியாவிலும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசியல் வாதிகளோ, அதிகாரிகளோ மக்களின் நலன் கருதி தமது சேவையினை ஆரம்பிப்பதற்காக தமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்வோம் என தெரிவிக்கவில்லை எனவும் தம்மை சந்தித்து கலந்துரையாடவில்லை எனவும் […]
கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை!
கிழித்தெறியப்பட்ட மகிந்த பதாகை! ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பதுளையில் திறக்கப்பட்ட பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தின் பதாகையை இனம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் அது தொடர்பில் , பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த காரியாலயம் கடந்த 12ம் திகதி திறக்கப்பட்ட நிலையில், காரியாலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான பதாகையை இனம்தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். அதில் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய […]
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல்
யாழின் இருவேறு இடங்களில் வாள்களுடன் சென்ற குழு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலயில் சொத்துக்களுக்கும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியதோடு வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியினர் மீதும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா […]
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை […]
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் […]
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் எம்.கணேசராஜா இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலைச் சந்தேகநபர்களான […]
தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம்
தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவை ஏற்படுத்த முயற்சி – கருணாகரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்குள் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றாரா என்கின்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இந்து கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது […]
இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல்
இராணுவக் கப்பல்களுக்கு ஒழுக்கக் கோவை அவசியம்: பிரதமர் வலியுறுத்தல் இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை ஏற்பாடு செய்வதற்கு ஸ்ரீலங்கா தயாரென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கான சிறந்த வழி இதில் பயணிக்கும் இராணுவக் கப்பல்களுக்காக ஒழுக்கக் கோவை ஒன்றை தயாரிப்பது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய […]
அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு !
அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் காத்திருப்பு ! பலத்த அமளிக்கு இடையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் பேரவையில் அமைதி காத்தனர். சட்டப்பேரவையில் இன்று பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் […]





